குடும்பத்துடன் சென்று புதிய காரை வாங்கியுள்ள நடிகர் நகுல்.. வீடியோ வெளியாக குவியும் வாழ்த்து
நடிகர் நகுல்
தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்களில் ஒருவர் தான் நடிகை தேவயானி.
பலரின் கனவுக்கன்னியாக மாறியவருக்கு முதல் ஹிட் படம் என்றால் அது காதல் கோட்டை தான். தமிழை தாண்டி தெலுங்கிலும் நடித்தவர் ஹிந்தி, வங்காள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவரின் தம்பி என்ற அடையாளத்துடன் சினிமாவில் நடிக்க வந்தவர் தான் நகுல். பாய்ஸ் படத்தில் படு குண்டாக காணப்பட்டவர் படங்களில் நடிப்பதற்காக சுத்தமாக உடல்எடை குறைத்து ஆளே மாறினார்.
ஆனால் அவருக்கு வெற்றிப் படங்கள் என்று எதுவும் அமையவில்லை.
புதிய கார்
சமீபத்தில் தேவயானி மகள் போட்டியாளராக இருக்கும் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் சிறந்த விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிலையில் நடிகர் நகுல் தனது குடும்பத்துடன் சென்று புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.