ரூ.1,000 கோடி செலவு.. கார்த்தியின் மெய்யழகன் படம் குறித்து ஓப்பனாக சொன்ன நானி
நானி
தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் நானி. தெலுங்கில் நடித்து வந்த நானி, வெப்பம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தசரா மற்றும் hi நானா ஆகிய இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நானி 'ஹிட் 3' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை பிரபல இயக்குநரான சைலேஷ் கொலானு இயக்குகிறார். இப்படம் வரும் மே 1 - ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் புரமோசன் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நானி ஓபன்
இந்நிலையில், தமிழ் சினிமா என்பதை மறந்துவிடுங்கள். கடந்த பத்தாண்டுகளில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று 'மெய்யழகன்'. ரூ.1,000 கோடி செலவு செய்து ஒரு படம் எடுக்கலாம்.
ஆனால் 'மெய்யழகன்' படம் மிகவும் ஸ்பெஷல். அந்தப் படத்தில் ஏதோ மேஜிக் உள்ளது. படத்தை பார்த்த பின் நான் கார்த்தியிடம் பேசினேன். மெய்யழகனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், நான் மகிழ்ச்சியாக உணர்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    