குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியை Roast செய்த நடிகர் நானி.. என்ன சொன்னார் தெரியுமா?
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி, சிரிக்காதவர்களை கூட குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி.
கடந்த 2019ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி பார்திவ் மணி இயக்கத்தில் முதல் சீசன் தொடங்கப்பட்டது. முதல் சீசனிற்கே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்க அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி தொடங்கியது.
கடைசியாக ஒளிபரப்பான 5வது சீசனில் இருந்து இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் முதல் அனைத்துமே மாற்றப்பட்டது. விரைவில் அதாவது வரும் மே 4ம் தேதி 6வது சீசன் தொடங்கவுள்ளது.
நடிகர் பேட்டி
6வது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் நிகழ்ச்சியின் புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் விரைவில் நானி நடிப்பில் தயாராகியுள்ள Hit The Third Case படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் புரொமோஷனுக்காக பிரபல யூடியூபரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமுமான இர்பான் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது இர்பான் தனக்கு ஒரளவிற்கு சமையல் தெரியும் என்றும் அந்த ஷோவில் 3வது இடம் என்றும் கூறினார். அதனைக் கேட்ட நானி, அந்த ஷோவில் யாருக்குமே சமைக்க தெரியாது, அதில் 3வது பரிசா என ரோஸ்ட் செய்துள்ளார்.