திருமணமாகி 15 வருடங்கள்.. மனைவி கர்ப்பம்: விக்ரம் பட நடிகர் நரேன் வீட்டில் விசேஷம்
நடிகர் நரேன் தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
நரேன்
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களில் நடித்த நரேன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சினிமாவிலும் அவர் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
கைதி, விக்ரம் போன்ற படங்களில் நடித்து அவர் மீண்டும் கோலிவுட்டில் குணச்சித்திர நடிகராக தடம் பதித்து வருகிறார்.
மனைவி கர்ப்பம்
நரேன் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஹரிதாஸுக்கும் ஒரு மகள் இருக்கிறார். நரேனின் மகள் தன்மயாவுக்கு தற்போது 14 வயதாகிறது.
இந்நிலையில் நேற்று 15வது திருமண நாளை நரேன் - மஞ்சு ஜோடி கொண்டாடிய நிலையில், மேலும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பது தான் அது.
நரேன் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் இதை அறிவித்து இருக்கும் நிலையில், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
ஒரெ ஒரு புகைப்படத்தின் மூலம் இரண்டாவது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேகனா ராஜ்!

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
