சூர்யாவின் கருப்பு படம் எப்படி வந்திருக்கு? வெளிப்படையாக பேசிய படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்
கருப்பு
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி வில்லனாகவும் பாலாஜிதான் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்திலிருந்து டீசர் ஒன்று வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளிவரும் என்பது போல் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படம் எப்படி வந்திருக்கு
இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கும் நடிகர் நட்டி, சமீபத்திய பேட்டியில் கருப்பு திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
"பிரமாதமா வந்துருக்கு, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் அதுவும் ஒன்றாக அமையும் என நான் நம்புகிறேன். ஆர்.ஜே. பாலாஜி சார் எவ்வளவு முயற்சி எடுத்து செய்ய முடியுமோ, அவ்வளவு முயற்சி எடுத்து செய்கிறார். சில விஷயங்கள் அவர் சொல்லிருக்காரு, அதெல்லாமே அவர் சொல்லச் சொல்ல நான் சிரிச்சிக்கிட்டே இருந்தேன். அப்படி இருந்தது அது. நீதிமன்றம் என்றால் என்னவென்று நமக்கு தெரியும், வெளியே இருந்து நீதிமன்றத்தை பார்த்திருக்கிறோம்".
"ஆனால், நீதிமன்றத்தை செயல்படுத்த சில விஷயங்கள் இருக்குள, அதே இந்த படத்தில் சொல்லுவாங்க. ஒரு கேஸ் எப்படி கொடுக்குறது என்பது நமக்கு தெரியாது, வக்கீலுக்கு தான் தெரியும். இவங்க அத ஆராய்ச்சி பண்ணி படத்துல பண்ணிருக்காங்க. அது ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. நான் அத ரசிச்சிகிட்டே இருந்தேன். ஒரு ஜாலியான படம், அதைவிட ஒரு நல்ல படமாக இருக்கும். ரொம்ப சுவாரஸ்யமான, வித்தியாசமான கதையாக இருக்கும், இப்போ என்னால் சொல்ல முடியவில்லை" என நட்டி கூறியுள்ளார்.