மகன், மருமகள் பற்றி நடிகர் நெப்போலியன் நெகிழ்ச்சியாக வெளியிட்ட வீடியோ
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானில் நடைபெற்றது. அதில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தனது மகன் திருமணம் பற்றி வந்த பல்வேறு விமர்சனங்களுக்கும் நெப்போலியன் கோபமாக முன்பு பதிலடி கொடுத்து இருந்தார்.
பணத்திற்காக நடந்த திருமணமா.. தனுஷுக்கு தேவை ஒரு நர்ஸ், மனைவி அல்ல என்றெல்லாம் சிலர் விமர்சித்தனர். அக்ஷயா விரும்பி தான் திருமணம் செய்துகொள்கிறார் என நெப்போலியன் விளக்கமும் கொடுத்த்தார்.
திருமணம் முடிந்த பிறகு மொத்த குடும்பமும் பல்வேறு நாடுகளுக்கு கப்பல் மூலமாக சென்று கொண்டிருக்கின்றனர். வியட்னாம் நாட்டை தொடர்ந்து தற்போது சிங்கப்பூருக்கு அவர்கள் சென்று இருக்கின்றனர்.
நெப்போலியன் பதிவு
இந்நிலையில் காதலர் தினத்தன்று மகன் மற்றும் மருமகள் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் நெப்போலியன்.
திருமணம் முடிந்து 100வது நாள் இது என்றும் குறிப்பிட்டு அவர் வாழ்த்து கூறி இருக்கிறார். இதோ..