சீரியல் நடிகர் நேத்ரனின் கடைசி நாட்கள் என்ன ஆனது, முதன்முறையாக கூறிய அவரது மனைவி தீபா... எமோஷ்னல் பதிவு
நேத்ரன்
நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி நிறைய சீரியல்கள் நடித்திருப்பார்.
சின்னத்திரையில் பல சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றார்.
கடைசியாக பொன்னி தொடரில் கொஞ்சம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நடனத்திலும் பிரபலமான இவர் நிறைய நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்று கலக்கி இருக்கிறார்.
இவர் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தவர் கடந்த ஆண்டு காலமானார்.
தீபா பேட்டி
இந்த நிலையில் மறைந்த நடிகர் நேத்ரனின் மனைவியும், நடிகையுமான தீபா தனது கணவர் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், நேத்ரனுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது, அதற்காக ஹோமியோபதி மருந்து எடுத்துக்கொண்டார்.
இது தவிர, 4 ஆண்டுகளாகவே அடிக்கடி வயிற்று வலியுடனும் அவதிப்பட்டு வந்தார், அதற்கும் சிகிச்சையை எடுத்துக்கொண்டார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம்தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது, வயிற்றில் ஆபரேஷன் நடக்க பின் போட்ட தையல் பிரிந்துவிட்டது. இதனால் ஹீமோ சிகிச்சை அளிக்க முடியவில்லை.
4 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்தது, ஆரம்பத்திலேயே ஸ்கேன் எடுத்துப் பார்த்திருந்தார், நேத்ரனை காப்பாற்றி இருக்கலாம் என வேதனையுடன் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
