சுவாரஸ்யமான கதையில் நடிக்கும் சசிகுமார்.. எதில் தெரியுமா? அதிரடி தான்!
சசிகுமார்
திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின் சினிமாவில் இயக்குநராக களமிறங்கினார்.
'சுப்ரமணியபுரம்' என்ற படத்தை இயக்கியும், நடித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததால் பிரபல நடிகராக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பின் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன்,உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அதிரடி தான்!
இந்நிலையில், தற்போது நடிகரும் இயக்குநருமான சசிகுமார் கிரைம் திரில்லர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு அமேசான் பிரைம் OTT -ல் வெளியான 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க உள்ளார்.

இந்த சீசன் கிரைம் திரில்லர் பாணியில் சுவாரஸ்யமான கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.