ரசிகர்களின் பேவரெட் நாயகன் நிவின் பாலி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... பிறந்தநாள் ஸ்பெஷல்
நிவின் பாலி
நிவின் பாலி, மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற ஒற்றைப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்றவர்.
காதல் கதைக்களத்தில் நெஞ்சை தொட்ட இப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. கடைசியாக தமிழில் நிவின் பாலி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் வெளியாகி இருந்தது.
தற்போது நிவின் பாலி பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 4, 5க்கும் மேற்பட்ட படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நிவின் பாலி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனால் அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில் அவரது சொத்து மதிப்பு விவரம் வலம் வருகிறது. நடிகர் நிவின் பாலி சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.