இளைய தளபதி பட்டம் என்னுடையது, விஜய் அப்பா சொன்ன வார்த்தை.. நடிகர் உடைத்த ரகசியம்
சரவணன்
90 களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரவணன். அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
இதையடுத்து உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது சரவணன் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரகசியம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " நான் சினிமாவில் இருந்ததால் என் சொந்த ஊரான சேலம் பக்கத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது, சேலம் திமுக கட்சியை சார்ந்த வீரபாண்டி ஆறுமுகம் என்பவர் தான் சினிமாவில் இருந்தால் ஏதாவது பட்டம் வேண்டும் என்று "இளைய தளபதி" பட்டத்தை கொடுத்தார்.
என் சில படங்களில் டைட்டில் கார்டில் அந்த பெயர் வைக்கப்பட்டது. பின் விஜய் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் அவர் பெயருக்கு பின் இளைய தளபதி என்று வைக்கப்பட்டது.
இது தொடர்பாக நான் சந்திரசேகரிடம் கேட்டபோது, எனக்கு தொடர்ந்து படங்கள் வந்தால் அந்த பெயரை போடுமாறு கூறினார். ஆனால், அதன்பின் எனக்கு வாய்ப்புகள் வரவில்லை அதனால் அந்த பட்டம் அப்படியே போய்விட்டது" என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

மோடி இல்லாமல் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது - விவாதமாகும் எம்.பி. நிஷிகாந்த் துபேவின் பேச்சு! IBC Tamilnadu
