நடிகர் பார்த்திபன் அறிவித்த சந்தோஷ செய்தி, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்... என்ன விஷயம்
பார்த்திபன்
பார்த்திபன், தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என தன்னை நிரூபித்து வருபவர்.
இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் பின் இயக்குனர் அவதாரம் எடுத்து 16 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.
14 படங்களை தயாரித்தும், 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். பாரதி கண்ணம்மா, நீ வருவாய் என, வெற்றிக் கொடி கட்டு, அழகி, ஆயிரத்தில் ஒருவன், ஒத்த செருப்பு போன்ற படங்கள் இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
நடிகரின் மகன்
பிரபலங்களின் வாரிசுகள் தொடர்ந்து சினிமாவில் களமிறங்கி வருகிறார்கள். அப்படி நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் மகன் ராக்கி விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம்.
தனது மகன் சினிமாவில் இயக்குனராக களமிறங்குகிறார் என்பதை எவ்வளவு அழகாக பார்த்திபன் அறிவித்துள்ளார் என்பதை நீங்களே காணுங்கள்,
ராக்கி பார்த்திபன் !
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 14, 2025
என் மகன்
என் உயிருக்கு நிகர்.
கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து
தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார்… pic.twitter.com/GMUEcMEEAb

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
