முன்னணி நடிகரும், துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பவன் கல்யாண்
தெலுங்கு சினிமாவை ஆளும் மெகா குடும்பத்தின் ஒரு நடிகர் தான் பவன் கல்யாண்.
அக்கட அம்மி இக்கட அப்பாயி என்ற படத்தின் மூலம் கடந்த 1996ம் ஆண்டு திரைத்துறையில் நாயகனாக அறிமுகமானார். ஆண்டுக்கு ஒரு படம் 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 30 படங்கள் நடித்துள்ளார்.
30 படங்களே நடித்தாலும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் இடையே பெரிய மாஸ் நடிகராக வலம் வருகிறார். சினிமாவில் கொடிகட்டி பறந்த காலத்திலேயே அதாவது கடந்த 2014ம் ஆண்டு ஜனசேனா என்ற சொந்த கட்சியை நிறுவினார்.
இப்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராக இருக்கிறார்.
சொத்து மதிப்பு
கடந்த 2024ம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்டபோது பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது அவருக்கு ரூ. 164 கோடிகள் மதிப்பிலான சொத்து இருப்பதும், ரூ. 65 கோடிகள் வரை கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு படத்திற்கு ரூ. 50 கோடிகளில் இருந்து ரூ. 60 கோடிகள் வரை சம்பளமாகப் பெறுகிறார். விஜயவாடாவில் ரூ. 16 கோடிகள் மதிப்பில் வீடு, ரூ. 1.75 கோடி மதிப்பில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஒரு பிளாட், ஜுபிலி ஹில்ஸில் ரூ. 12 கோடி மதிப்பில் ஒரு வீடும் வைத்துள்ளாராம்.

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
