வீல்சேரில் நடிகர் பொன்னம்பலம்.. தற்போதைய நிலையை பார்த்து ரசிகர்கள் கலக்கம்
நடிகர் பொன்னம்பலம் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர். 90களில் அவர் பல மிரட்டலான ரோல்களில், முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் வில்லனாக நடித்திருக்கிறார் அவர்.
சமீப காலமாக அவர் படங்களில் நடிப்பது இல்லை. அதற்கு காரணம் அவர் உடல்நலக் குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வருவது தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு கிட்னி பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி 45 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி இருந்தார்.
பொன்னம்பலம் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீல் சேர்
தற்போது நடிகர் பொன்னம்பலம் உடல்நிலை மோசமாகி வீல்சேரில் அமர்ந்த நிலையில் தான் எப்போதும் இருக்கிறார்.
வீல் சேரில் அமர்ந்தபடி அவர் டான்ஸ் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அதை பார்த்து ரசிகர்கள் வருத்தமாக பேசி வருகின்றனர். எப்படி இருந்த மனுஷன், இப்போது இப்படி ஒரு நிலையில் இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
💥 Ponnambalam's Mass Kuthu Dance!#ponnambalam #latestupdates #cineulagam pic.twitter.com/bhWycEtPih
— Cineulagam (@cineulagam) February 3, 2026
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri