ரூ. 100 கோடியில் இருந்து மீண்டும் சம்பளத்தை உயர்த்திய நடிகர் பிரபாஸ்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்
நடிகர் பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் பிரபாஸ். இவர் நடிப்பில் பாகுபலி படத்திற்கு பிறகு வெளிவந்த சாஹா, ராதே ஷ்யாம் ஆகிய இரு திரைப்படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது.
இப்படத்தை தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் தற்போது பிரபாஸ் ஓம் ரவுத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வரும் பிரபாஸுக்கு, இப்படத்தில் நடிக்க ஏற்கனவே ரூ. 100 கோடி சம்பளமாக பேசப்பட்டிருந்தது.
சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்
இந்நிலையில், தற்போது தனது சம்பளத்தை இதில் இருந்து உயர்த்தியுள்ளாராம் நடிகர் பிரபாஸ். அதாவது, ரூ. 100 கோடியில் இருந்து ரூ. 120-வதாக இப்படத்திற்கு சம்பளம் கேட்டுள்ளாராம்.
இது, அப்படத்தின் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனொன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.