இத்தாலியில் சொகுசு வீடு, ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம்- டாப் நாயகன் பிரபாஸ் சொத்து மதிப்பு
நடிகர் பிரபாஸ்
சினிமாவில் களமிறங்கும் அனைவருக்குமே வெற்றி உடனே வருவதில்லை. இப்போது டாப் இடத்தில் இருப்பவர்கள் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டு தான் இருந்திருப்பார்கள்.
அப்படி பாகுபலி என்ற படம் தெலுங்கு சினிமா ரசிகர்களையும் தாண்டி இந்திய சினிமா ரசிகர்களும் கொண்டாடும் அளவிற்கு நடிகர் பிரபாஸிற்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.
அந்த ஒரு படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்தாலும் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் வெளியானது தெரியாமல் அதே வேகத்தில் காணாமல் போய்விடுகிறது, சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் ஆகிய மூன்று பிரம்மாண்ட படங்களும் படுதோல்வி அடைந்தது, அதாவது அந்த அளவிற்கு விமர்சனமோ, வசூலோ பெறவில்லை.
பிரபாஸ் நடித்துள்ள கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 22-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது, இந்த படம் எப்படி இருக்கப்போகிறது என்பது தான் ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது.

சொத்து மதிப்பு
அண்மையில் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நடிகர் பிரபாஸ் சொத்து மதிப்பு ரூ. 240 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ஒரு படத்துக்கு ரூ. 150 கோடி சம்பளம் பெறும் பிரபாஸ் ஹைதராபாத்,, மும்பை, சமீபத்தில் இத்தாலியிலும் ஒரு சொகுசு பங்களா வாங்கியுள்ளாராம். ஒவ்வொன்றும் பல கோடி மதிப்புள்ள வீடுகளாம். பிரபாஸ் கார்கள் மீதும் அலாதி பிரியம் கொண்டவர். இதனால் பல சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ளார்.
இவரிடம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் கார், ஆடி ஏ6, பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், ஜாகுவார் XJL, ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், லம்போகினி போன்ற சொகுசு கார்கள் உள்ளன.
