பல கோடிகளுக்கு சொந்தக்காரர் நடிகர் பிரபாஸ் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல்
நடிகர் பிரபாஸ்
தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோவாக பல வெற்றிப் படங்களை கொடுத்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரபாஸ்.
தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவருக்கு பாகுபலி படத்தால் திரை வாழ்க்கையே மாறிவிட்டது.
40 வயதை கடந்தும் இன்னும் சிங்கிளாகவே உள்ளார், பல முறை எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்து வருகிறார்.
கடந்த 22 ஆண்டுகளில் 23 படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் இந்திய சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவையே தன்னை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
சொத்து மதிப்பு
இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிரபாஸ், ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.
ஒரு படத்திற்கு ரூ. 100 கோடிகளில் இருந்து ரூ. 200 கோடிகள் வரை சம்பளமாகப் பெறுகின்றார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 240 கோடிகள் என கூறப்படுகிறது.