சலார் 2 படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள்.. குண்டை தூக்கி போட்ட நடிகர் பிரபாஸ்
சலார் 2
கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் சலார் 2. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதுவும் பிரஷாந்த் நீலின் கேஜிஎப் 2 படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் இப்படம் வெளிவந்ததால், பெரிதும் எதிர்பார்த்தனர்.
மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றாலும் சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களையும் முன் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கூட சலார் 2 திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தள்ளிப்போன படப்பிடிப்பு
இந்த நிலையில், லேட்டஸ்ட் தகவலின்படி, சலார் 2 திரைப்படத்தை பிரபாஸ் தள்ளிவைத்துவிட்டாராம். அதற்குமுன் ஹனு-மான் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
ஆகையால் இதன்பின் தான் சலார் 2 படத்தில் பிரபாஸ் நடிப்பார் என கூறப்படுகிறது. சலார் 2 படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள், இந்த தகவல் சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.