புதிய சொகுசு கார் வாங்கியுள்ள நடிகர் பிரபுதேவா... எவ்வளவு விலை தெரியுமா?
பிரபுதேவா
பேச்சு கம்மி, செயல் அதிகம் காட்டும் பிரபலங்களில் ஒருவர் தான் பிரபு தேவா.
நடன இயக்குனராக அறிமுகமாகி, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை காட்டியவர். தமிழ் மட்டுமில்லை தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளில் மாஸ் காட்டி இருக்கிறார்.
அடுத்தடுத்து படங்கள் நடித்து பிஸியாக இருக்கும் பிரபு தேவா கைவசம் இப்போது தமிழ், மலையாளம், ஹிந்தி படங்கள் உள்ளனவாம்.

புதிய கார்
கடந்த 2012ம் ஆண்டு தெற்கு மும்பையில் மகாலட்சுமி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு பிளாட்களை வாங்கியிருந்தார் பிரபு தேவா.
அந்த பிளாட்டுகளை அவர் ரூ. 14.80 கோடிக்கு சமீபத்தில் விற்றதாக தகவல் வந்தது. இந்த நிலையில் நடிகர் பிரபு தேவா சொகுசு மின்சார கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
புதியதாக பிரபு தேவா வாங்கியுள்ள இந்த கார் ரூ. 70 முதல் 75 லட்சம் வரை இருக்கலாம் என தகவல் வந்துள்ளது.
