என்னை பல ஹீரோயின்ஸ்.. நடிகர் பிரதீப் ரங்கநாதன் உடைத்த ரகசியம்
பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது. அது மட்டுமின்றி லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் பிரதீப்.
தற்போது, பிரதீப் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிராகன்' படத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் இந்த மாதம் 21 - ம் தேதி வெளியாக உள்ளது.
உடைத்த ரகசியம்
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பிரதீப் நடிகைகள் குறித்து பேசிய விஷயங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " முதலில் நடிகைகள் என்னுடன் நடிக்க மிகவும் தயக்கம் காட்டினார்கள். லவ் டுடே படத்திற்காக பல நடிகைகளை அணுகினேன். ஆனால் என்னை அனைவரும் ரிஜெட் செய்து விட்டார்கள். தற்போது அனுபமா பரமேஸ்வரன் என்னுடன் நடித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.