டிராகன் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படம் ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது.
சமீபத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான Dragon திரைப்படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
ரிலீஸ்
தற்போது, விக்னேஷ் சிவன் நடிப்பில் LIK திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, LIK திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.