குட் பேட் அக்லி படத்தின் மூலம் நிறைவேறிய கனவு.. நடிகர் பிரசன்னா வெளியிட்ட உணர்ச்சிவசமான பதிவு
நடிகர் பிரசன்னா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தற்போது அவரது 63 - வது படமான 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து, குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார் என கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவர வில்லை.
வெளியிட்ட பதிவு
இந்நிலையில், நடிகர் பிரசன்னா அவரது இன்ஸ்டா பக்கத்தில் குட் பேட் அக்லி படத்தை பற்றியும், நடிகர் அஜித் குறித்தும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில், "நடிகர் அஜித்துடன் நான் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. அவருடன் நடிக்க எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த வாய்ப்புகளை எல்லாம் சில காரணத்திற்காக நான் இழந்துள்ளேன். தற்போது அந்த கனவு பலித்து விட்டது. ஆம், நான் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறேன்.
என்னுடைய சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், என்னால் தற்போது இது குறித்து தகவலை பகிர முடியாது. நாம் அனைவரும் நினைக்கும்படி நடிகர் அஜித் மிகவும் இயல்பான, பணிவான குணத்தை கொண்டவர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை" என பதிவிட்டுள்ளார்.

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு News Lankasri

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu
