அஜித் குண்டாக ஆனதற்கு இது தான் முக்கிய காரணம், பிரபல நடிகர் வெளிப்படையான பதில்
தல அஜித் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று கூட சொல்லலாம். ஏனெனில் அவரின் வலிமை படத்தின் பிஸினஸ் ஹிந்தி படங்களுக்கு இணையாக இருக்கும் என்றே கூறப்படுகின்றது.
இந்நிலையில் அஜித் தற்போது வலிமை படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார், இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அஜித் சென்னை திரும்பவுள்ளார்.
சரி இது ஒரு புறம் இருக்கட்டும், அஜித் எப்போதும் உடல் எடையை ஏற்றி, இறக்கி நடிப்பவர். ஒரு படத்தில் குண்டாக இருந்தால், அடுத்தப்படத்திலேயே உடல் எடையை குறைத்து, ‘அட அஜித்தா இது’ என்று ஆச்சரியப்பட வைப்பார்.
தற்போது வலிமையில் கூட உடல் எடையை குறைத்து நடித்துள்ளார், ஆனால், இவருக்கு ஏன் உடல் எடை ஏறுகின்றது என்பதை அவள் வருவாளா, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்த் பிரித்விராஜ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையிலை ‘அஜித்திற்கு முதுகில் பெரிய பிரச்சனை உள்ளது, அதனாலேயே அவரால் பெரியளவில் உடற்பயிற்சி எடுக்க முடியாது.
அதன் காரணமாகவே அவர் உடல் எடை ஏறலாம்’ என்று பிரித்விராஜ் கூறியுள்ளார்.