நடிகர் புகழ் மகளுக்கு சூட்டி இருக்கும் பெயர்.. என்ன தெரியுமா?
புகழ்
குக் வித் கோமாளி மூலமாக பிரபலம் ஆனவர் புகழ். தற்போது சினிமாவிலும் அவர் காமெடியனாக கலக்கி வருகிறார். அது மட்டுமின்றி ஹீரோவாக Mr Zoo Keeper என்ற படத்தில் புகழ் நடித்து வருகிறார்.
புகழ் மற்றும் அவரது மனைவி பென்ஸி ஆகியோருக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அதை புகழ் மகிழ்ச்சியாக அறிவிக்க, அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

மகள் பெயர்
தற்போது புகழ் அவரது மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தி இருக்கிறார். பு.ரித்தன்யா என அவர் மகளுக்கு பெயர் சூட்டி இருக்கிறார்.
"கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை..., இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே."
"எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்" என புகழ் பதிவிட்டு இருக்கிறார்.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? IBC Tamilnadu