நடிகர் ரஜினியுடன் மோதும் ஹிரித்திக் ரோஷனின் வார் 2.. ஜெயிக்கப்போவது யார்?
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். ரஜினியை தாண்டி இப்படத்தில் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 14- ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக நேற்று படக்குழு அறிவித்தனர்.
மோதல்
இந்நிலையில், ரஜினியின் கூலி படத்திற்கு போட்டியாக ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது.
இயக்குநர் அயான் முகர்ஜி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள வார் படத்தின் 2ஆம் பாகமும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது.
இதனால், இந்த இரண்டு படங்களும் மோதிக் கொள்ள உள்ளது. இதில், எந்த படம் ஜெயிக்கப்போவது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
