சுத்தமாக சம்பளமே வாங்காமல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம்- இதனால் தான் வாங்கவில்லையா?

Yathrika
in பிரபலங்கள்Report this article
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியாகி இருந்த ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, அனிருத்தின் இசையும் மக்களால் கொண்டாடப்பட்டது.
கிட்டத்தட்ட ரூ. 700 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பிறகு ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்கிறார்.
சம்பளம் வாங்காத படம்
இன்று கோடிகளில் சம்பளம் வாங்கி கலக்கும் ரஜினி ஒரு படத்தில் சுத்தமாக பணம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார்.
ரஜினியை வைத்து எஸ்.பி.முத்துராமன் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்தவர், அவர்கள் இணைந்தாலே ஹிட் என்ற நிலை தான் இருந்தது.

மருத்துவ துறையில் பணத்திற்காக இப்படி நடக்கிறது- சத்யராஜ் மகள் திவ்யா ஷேர் செய்த பகீர் தகவல், வீடியோ இதோ
முத்துராமன் அவர்களிடம் 14 பேர் கொண்ட டீம் இருந்தது, கேமராமேன், மேக்கப் மேன் என அனைவரும் உள்ளார்கள். இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முத்துராமன் நினைப்பதை ரஜினியிடம் கூறியுள்ளார்.
அதற்கு ரஜினி உங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி பாண்டியன் படத்தில் நடித்தாராம். அதுவரை எந்தப் படத்தையும் தயாரிக்காத முத்துராமன் பாண்டியன் படத்தை சொந்தமாக தயாரித்தாராம்.
அந்தப் படத்தில்தான் ரஜினிகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுத்தாராம்.
You May Like This Video

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

மசோதாக்களுக்கு ஒப்புதல்; முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இனி.. ஆளுநருக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம் IBC Tamilnadu

ஆளுநர் ரவிக்கு மூக்குடைப்பு; ராஜ்பவனை விட்டு வெளியேறுக - அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளிப்பு IBC Tamilnadu
