நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக வாங்கிய காரை பார்த்துள்ளீர்களா?- வைரலாகும் புகைப்படம்

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகர் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் எந்த விழா மேடையாக இருந்தாலும் தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள், நல்ல விஷயங்கள் குறித்து கூறுவார். அப்படி 2019ம் ஆண்டு தர்பார் இசை வெளியீட்டு விழாவில் தான் வாங்கிய முதல் கார் குறித்து கூறியிருந்தார்.
அதில் அவர், பதினாறு வயதினிலே படம் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருந்த நேரம் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னிடம் நடிக்க கால்ஷீட் கேட்டார்.
நானும் ஓகே சொல்லி 1000 ரூபாய் கேட்டேன், இரண்டு நாளில் படப்பிடிப்பு தொடங்கிவிடும் இப்போது பணம் இல்லை நாளை தருகிறேன் என்றார்.
ஆனால் பணம் வரவில்லை, தயாரிப்பாளருக்கு போன் செய்து கேட்டால் நாளை படப்பிடிப்பிற்கு மேக்கப் போடுவதற்கு முன் தருகிறேன் என்றார்.
மேக்கப் போடுவதற்கு முன் பணம் கேட்டால் என்னை மோசமாகத் திட்டி உனக்கு கேரக்டர் இல்லை வெளியே போ என்றார். சரி போகிறேன் கார் அனுப்புங்கள் என்றால் நீ நடந்து போ, கொடுக்க முடியாது என்றார்.
முதல் கார்
அந்த சம்பவத்திற்கு பிறகு சினிமாவில் கடுமையாக உழைக்கத் தொடங்கினேன். பபின்னர் என் வாழ்க்கையில் முன்னேறி கார் வாங்கி அதே ஸ்டுடியோவில் கொண்டு சென்று நிறுத்தினேன் என்று கூறினார்.
தற்போது தனது முதல் காருடன் ரஜினி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,
நீச்சல் குளத்தில் கருப்பு நிற கிளாமரான உடையில் ரைசா நடத்திய போட்டோ ஷுட்- புகைப்படங்கள் இதோ