பாக்ஸ் ஆபிஸ்: அமெரிக்காவில் வரலாற்று சாதனை படைத்த ஜெயிலர் 2, நம்பர் 1 வசூல்

Report

ஜெயிலர் 2

தமிழ் சினிமாவில் என்றைக்கும் எப்போதும் ரஜினிகாந்த் தான் நம்பர் 1 என நிரூபித்து வருகிறார்.

கடந்த் 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ரஜினி தான் வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்த் என்றைக்கும் தன் நம்பர் 1 இடத்தை யாருக்காகவும் விட்டு கொடுத்தது இல்லை, அதை ஜெயிலர் 2 மூலம் மீண்டும் நிரூபித்துவிட்டார்.

பாக்ஸ் ஆபிஸ்: அமெரிக்காவில் வரலாற்று சாதனை படைத்த ஜெயிலர் 2, நம்பர் 1 வசூல் | Actor Rajinikanth Jailer 2 Movie Us Box Office

நார்த் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் இதுநாள் வரை ஜெயிலர் முதல் பாகம் தான் நம்பர் 1 இடத்தில் இருந்து வந்தது, சுமார் 7.25 மில்லியன் டாலர் வசூல் செய்து ஜெய்லர் முதல் பாகம் இருக்க, அந்த வசூலை ஜெயிலர் 2 முறியடித்துள்ளது.

ஆம், ஜெய்லர் 2 நார்த் அமெரிக்காவில் 7.3 மில்லியன் டாலர் வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படமாக ஜெயிலர் 2 இடம்பிடித்துள்ளது.

மேலும் முதல் 10 இடங்களில் நார்த் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 7 இடங்கள் வரை ரஜினி படங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US