அச்சு அசல் ரஜினிகாந்த் போலவே இருக்கும் நபர்.. அனைவரையும் மிரள வைத்த வீடியோ இதோ
ரஜினிகாந்த்
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. மேலும் தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரஜினி போலவே இருக்கும் நபர்
தங்களுக்கு பிடித்த நடிகர்களை போலவே ஹேர் ஸ்டைல் வைப்பது, தாடி வைப்பது என தங்களது லுக்கை ரசிகர்கள் மாற்றிக்கொள்வார்கள். அதிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் சொல்லவே தேவையில்லை. அவரை போல் தங்களது தோற்றத்தை பலரும் மாற்றிக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான ஒருவர் அச்சு அசல் அப்படியே ரஜினிகாந்த் போலவே தோற்றத்தில் உள்ளார். அந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் மிரண்டுபோய்விட்டனர்.
இதோ அந்த வீடியோ..
என்ன அப்படியே Xerox எடுத்த மாதிரியே இருக்காப்ளே.. pic.twitter.com/9D81RAzV7J
— Dr. தண்டச் சோறு (@siya_twits) June 30, 2025