73 வயதிலும் இந்திய சினிமாவை ராஜ்ஜியம் செய்யும் நடிகர் ரஜினிகாந்த் சொத்து மதிப்பு- இத்தனை கோடியா?

Yathrika
in பிரபலங்கள்Report this article
ரஜினிகாந்த்
டிசம்பர் 12, 1950ம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் வசித்து வந்த மராட்டிய குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.
கூலி வேலை முதல் கண்டக்டர், தெருக்கூத்து கலைஞர் என கிடைக்கும் வேலைகளை செய்து வந்த இவர் சென்னை வந்து சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார்.
அபூர்வ ராகங்கள் படம் அவருக்கு கிடைத்த முதல் அறிமுக படம், அப்போது ஆரம்பித்த அவரது திரைப்பயணம் 2023 வரை தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
48 ஆண்டுகளாக வெற்றிகரமாக திரைப்படங்கள் நடித்துவரும் ரஜினியின் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது.
போயஸ் கார்டனில் வீடு, விலையுயர்ந்த கார்கள், படத்துக்கு படம் பல கோடி சம்பளம் உயர்வு என கலக்கும் நடிகர் ரஜினிகாந்த் சொத்து மதிப்பு ரூ. 480 கோடி முதல் ரூ. 500 கோடி வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.