அஜித் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ரஜினிகாந்த்.. அடுத்த பட இயக்குனர் இவரா?
ரஜினிகாந்த்
இந்திய சினிமா ரசிகர்களின் மனதை ஆழும் நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த்.
இவரது படம் என்றாலே இந்தியா முழுவதும் கொண்டாட்டம் தான், இப்போதும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் நடிகராக உள்ளார்.
ரஜினி நடிப்பில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது.
அடுத்த படம்
தற்போது நடிகர் ரஜினியின் புதிய படம் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் மூலம் சமீபத்தில் மாஸ் வெற்றிக்கண்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரஜினி படம் நடிக்க உள்ளாராம்.
இந்த படத்தை இளம் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன் நானியை வைத்து Saripodhaa Sanivaaram என்ற படத்தை இயக்கியிருந்தார்.