ரசிகர் செய்த செயல், வீட்டிற்கு அழைத்து வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்... அப்படி என்ன செய்தார்?
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமா இல்லை இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு முன்னணி நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். கடைசியாக ரஜினி நடிப்பில் கூலி படம் வெளியானது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு பெரிய வரவேற்பு பெறவில்லை.
தற்போது ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிவர் 2 படத்தில் நடித்து வருகிறார், படத்திற்கான வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது.

ரசிகர்
சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அவர்களது ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார்கள். ரசிகர்கள் ஏதாவது நல்லது செய்தார்கள் என்றால் சந்தோஷப்படுகிறார்கள், தவறு நடந்தாலும் கண்டிக்கிறார்கள்.
அதேபோல் தனது ரசிகர் செய்யும் சிறப்பான விஷயம் அறிந்த ரஜினிகாந்த் அவரை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.
மதுரையில் ரூ. 5க்கு பரோட்டா வழங்கி சமூக சேவை செய்யும் தனது ரசிகரான ஷாகுல் ஹமீதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அதோடு அவருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்து ரசிகர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
