நடிகர் ரமேஷ் அரவிந்த் வாழ்க்கை வரலாறு
பிறப்பு
கும்பகோணத்தில் கணக்காளரும், தொழிலதிபருமான பி.ஏ.கோவிந்தாச்சாரி மற்றும் ஜி.சரோஜா ஆகியோருக்கு பிறந்தார். ரமேஷ் அரவிந்திற்கு சுரேஷ், ஸ்ரீதர் என சகோதரர்களும், மீரா என்ற சகோதரியும் உள்ளார்.
அர்ச்சனா என்பவரை திருமணம் செய்த ரமேஷ் அவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் நிஹாரிகா என்ற மகளும் உள்ளனர்.
ரமேஷ் அரவிந்த்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். கன்னட திரைப்படங்களில் அதிகம் பணியாற்றிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, துளு என பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
கே.பாலசந்தர் கன்னடத்தில் இயக்கிய சுந்தர ஸ்வப்னகலு என்ற படத்தின் மூலம் அந்த மொழியில் அறிமுகமான ரமேஷ் அரவிந்த், தமிழில் உறுதி வேண்டும் என்ற படம் மூலமாகவும், தெலுங்கில் ருத்ரவீணை படத்தின் மூலமும் அறிமுகமாகியுள்ளார்.
தொடர்ந்து படங்கள் நடித்துவந்த ரமேஷ் அரவிந்த் 45க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும், 100க்கும் மேற்பட்ட கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி
பரிச்சயா, ப்ரீத்திண்டா ரமேஷ், ராஜா ராணி ரமேஷ், வீக்கெண்ட் வித் ரமேஷ், இந்தி நிம்மா ரமேஷ் என தொடர்ந்து நிறைய தொலைக்காட்சி தொடர்களை தொகுத்து வழங்கியுள்ளார்.
விருதுகள்
கர்நாடக மாநில விருது, பிலிம்பேர் விருது, ஆந்திர மாநில நந்தி விருது என பல விருதுகளையும் சிறந்த நடிப்பிற்காக வாங்கி குவித்துள்ளார்.