ரூ. 250 கோடியில் பங்களா கட்டிவரும் ரன்பீர் கபூர் வாங்கிய புதிய கார்- எத்தனை கோடி தெரியுமா?
ரன்பீர் கபூர்
எல்லா சினிமாவை போல பாலிவுட் சினிமாவில் ரசிகைகளின் கனவுக் கண்ணனாக இருப்பவர் நடிகர் ரன்பீர் கபூர்.
ரிஷி கபூர்-நீதூ கபூர் ஆகியோரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகனாக நுழைந்தவர் இப்போதும் டாப் நாயகனாகவே உள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் அனிமல் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அடுத்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
புதிய கார், வீடு
நடிகை ஆலியா பட்டை கடந்த 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகா என்கிற மகள் இருக்கிறார்.
இவர்கள் தங்களது மகள் ராகா பெயரில் ரூ. 250 கோடி செலவில் பங்களா ஒன்றை கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரன்பீர் கபூர் ரூ. 8 கோடி மதிப்புள்ள பெண்ட்லி (Bentley) வகைக் கார் ஒன்றை புதியதாக வாங்கியுள்ளார்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
