ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப்பொருள் விவகாரம்.. நடிகர் ரஞ்சித் அதிரடி கேள்வி
போதைப் பொருள்
கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய காரணத்தால் போலீசாரால் கைதானார்.
அவர் ஒரு படத்தில் நடித்ததற்காக பணம் பாக்கியை வாங்குவதற்காக பதிலாக போதைப் பொருளை வாங்கியிருக்கிறார். ஒன்று, இரண்டு முறை இப்படியே போக போதை பழக்கத்தால் அதற்கு அடிமையாகியுள்ளார் ஸ்ரீகாந்த்.
அவர் கைதான பிறகு இந்த பிரச்சனையில் நடிகர் கிருஷ்ணாவும் சிக்கியுள்ளார், ஆனால் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை, கைமாற்றியுள்ள சந்தேகத்தில் பிடிபட்டுள்ளார்.

ரஞ்சித் பேச்சு
இந்தியா போன்ற நாட்டில் போதைப் பொருட்கள் வளர்ந்து கொண்டு வருவது பேராபத்து, போதையால் ஒரு குடும்பமே அழிந்துவிடும், இதனால் வம்சமே இல்லாமல் போய்விடும்.
கொக்கைன் மட்டும்தான் போதைப் பொருளா? தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக்கில் சத்து டானிக்கா விற்குக் கொண்டிருக்கிறார்கள். அதை தினமும் வாங்கிக் குடித்தால் உடலுக்கு நல்லதா? அதுவும் போதைதானே? போதை என்பது பேராபத்தானது.

இதுதான் நம்மூரில் போராக இருக்க வேண்டும். அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், எடுக்க முடியும் என பேசியுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri