எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்... யாரு தெரியுமா?
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் செம ஹிட்டடித்த சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற விஷயங்களை பற்றி முக்கியமாக பேசும் கதைக்களமாக இந்த தொடர் அமைந்தது. முதல் பாகம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து 2ம் பாகம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
ரீ-என்ட்ரி
எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் கடந்த வருடம் தொடங்கப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது. இதில் குணசேகரனுக்கு பயந்து வீட்டில் முடங்கிய பெண்கள் இப்போது வெளியே துணிச்சலாக வந்துள்ளனர்.
சீரியல் தொடங்கியதில் இருந்து முதல் பாகத்தில் நடித்தவர்கள் ரீ என்ட்ரி கொடுத்த வண்ணம் உள்ளனர். குந்தவை, கொட்ரவை என ரீ என்ட்ரி ஆக சமீபத்தில் கௌதமும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதனால் இனி போகப்போக கதைக்களம் சூடு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.