சீரியல் நடிகையை திருமணம் செய்துகொண்ட ரெடின் கிங்ஸ்லியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
ரெடின் கிங்ஸ்லி
திரையுலகில் பல வருடங்களுக்கு முன் தங்களது பயணத்தை தொடங்கினாலும் பல கலைஞர்களுக்கு பெரிய அங்கிகாரமே கிடைப்பது இல்லை.
1998ம் ஆண்டு அவள் வருவாளா படத்தில் ருக்கு ருக்கு என்கிற பாடலில் குரூப் டான்ஸ் ஆடி இருப்பார் ரெடின் கிங்ஸ்லி. பின் தொடர்ந்து திரைத்துறையில் பல வகையில் பணியாற்றி வந்தாலும் கோலமாவு கோகிலா படம் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
அடுத்தடுத்து LKG, A1, ஜாக்பாட், டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், ஜெயிலர், டிடி ரிட்டன்ஸ் போன்று முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்று நடித்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி தான். பிஸியாக நடித்துவரும் ரெடினுக்கு மைசூரில் மிகவும் எளிமையாக சீரியல் நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
சொத்து மதிப்பு
46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வந்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அரசு கண்காட்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகிறாராம்.
நடிப்பு, சொந்த தொழில் என கவனிக்கும் ரெடின் கிங்ஸ்லியின் சொத்து மதிப்பு ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
