அட நடிகர் ரியோ ராஜின் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?- இதோ பாருங்க லேட்டஸ்ட் க்ளிக்
இசை தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருந்து அதிகம் பிரபலமானவர் ரியோ ராஜ். அப்படியே விஜய் தொலைக்காட்சிக்கு வந்த அவர் முதலில் சீரியலில் நடித்தார்.
பின் விஜய்யில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார், அப்படியே பிக்பாஸ் 4வது சீசனிலும் கலந்துகொண்டார். தற்போது நிறைய படங்கள் கமிட்டாகி வரும் ரியோ விரைவில் Ready Steady Po நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரியோவிற்கு ரித்தி என்ற மகள் உள்ளார்.
அண்மையில் ரியோ தனது மனைவி-மகளுடன் எடுத்த அழகிய கியூட் புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட ரியோ மகளா இது நன்றாக வளர்ந்துவிட்டாரே, செம கியூட் போட்டோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.