கியூட் நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஜெனிலியா
கடந்த 2003ம் ஆண்டு வெளியான ஹிந்தி படமான Tujhe Meri Kasam என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.
இந்த படத்தின் மூலம் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கும் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தின் மூலம் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, அப்படியே காதலாக மாறியது. படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர்கள் காதலிலும் உறுதியாக இருந்தனர்.
ரித்தேஷ் ஹிந்தி மற்றும் மராத்தி படங்களில் கவனம் செலுத்திவர ஜெனிலியா தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வந்தார்.
9 வருட காதலுக்கு பிறகு இவர்கள் 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள், இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சொத்து மதிப்பு
இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக். பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு பெரிய அளவில் பிறந்தநாள் பார்ட்டியும் கொடுத்துள்ளார் ரித்தேஷ்.
இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக இவரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. நடிகர் ரித்தேஷின் சொத்து மதிப்பு ரூ. 140 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
