நடிகர் ஆர்கே வீட்டில் 250 சவரன் திருடிய வேலைக்காரன் சிக்கினான்! கொள்ளையடித்தது இப்படித்தான்

Crime
By Parthiban.A 2 வாரங்கள் முன்

ஆர்கே

பிரபல நடிகரும் தொழிலதிபருமான ஆர்கே என்கிற ராதாகிருஷ்ணன் வீட்டில் சில வாரங்கள் முன்பு மர்ம நபர்கள் 250 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது மனைவியை கட்டிப்போட்டு இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறிய நிலையில், சிசி டிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

நடிகர் ஆர்கே வீட்டில் 250 சவரன் திருடிய வேலைக்காரன் சிக்கினான்! கொள்ளையடித்தது இப்படித்தான் | Actor Rk House Robbery Police Arrest Nepal

திருடிய வேலைகாரன்

ஆர்கே வீட்டில் செக்யூரிட்டி ஆக பணியாற்றிய ரமேஷ் என்ற நபர் தான் கூட்டாளிகள் உடன் கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அந்த நபர் நேபாள் நாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர்கள் அங்கு தப்பி செல்லாமல் இருக்க போலீசார் தீவிரமாக தேடினார்கள்.

வீட்டில் பணம், நகை எங்கே இருக்கிறது என்பதை நோட்டமிட்டு வந்த ரமேஷ் பின்வாசல் வழியாக கூட்டாளிகள் உடன் நுழைந்து கொள்ளையடித்து உள்ளான்.

தற்போது தனிப்படை போலீசார் நேபாளத்தில் ரமேஷ் மற்றும் கூட்டாளிகளை கைது செய்து இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து 150 சவரன் நகை கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அவனுடன் இன்னும் 3 கூட்டாளிகள் சேர்ந்து தான் இந்த கொள்ளையை செய்து இருக்கின்றனர்.

 நடிகர் ஆர்கே வீட்டில் 250 சவரன் திருடிய வேலைக்காரன் சிக்கினான்! கொள்ளையடித்தது இப்படித்தான் | Actor Rk House Robbery Police Arrest Nepal

Also Read: வீட்டில் பணியாற்றும் பெண்ணுக்கு உதவிய நயன்தாரா! ஒரே நொடியில் இவ்வளவு பணம் தூக்கி கொடுத்தாரா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US