திருமணம் ரகசியமாக நடந்தாலும் தனது மனைவியின் சீமந்தத்தை பிரம்மாண்டமாக நடத்திய நடிகர் ஆர்.கே.சுரேஷ்- அழகிய புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கி நல்ல படங்களை கொடுத்தவர் ஆர்.கே. சுரேஷ். பின் பாலா அவர்களால் வில்லனாக அறிமுகமாகி நிறைய படங்களும் நடித்து வருகிறார்.
ஆர்.கே. சுரேஷ் அவர்களுக்கு ஒரு சின்னத்திரை நடிகையுடன் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் அவர்களின் திருமணம் நின்றது.
கொரோனா லாக் டவுன் சமயத்தில் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் மது என்பவரை எந்த அறிவிப்பும் இன்றி திருமணம் செய்துகொண்டார். இதனால் அவரது திருமணத்தில் எந்த பிரபலங்களும் கலந்துகொள்ளவில்லை.
தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளாராம். மனைவியின் வளைகாப்பை சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து கொண்டாடியுள்ளார்.
அதில் நிறைய பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.