புரட்சி இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் வாழ்க்கை வரலாறு
எஸ்.ஏ. சந்திரசேகர்
தமிழ் சினிமாவில் அனைவராலும் புரட்சி இயக்குனர் என அழைக்கப்படுபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். 80 வயதாகியும் இன்று வரை திரைத்துறையில் பயணித்து கொண்டிருக்கும் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகரின் வாழ்க்கை வரலாறு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
வாழ்க்கை வரலாறு
ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் பிறந்தவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தனது படிப்பை முடித்துவிட்டு சென்னையில் அரசாங்க வேளையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அரசாங்க வேளையில் இருந்தால் கூட இவருக்கு திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனால் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் சவுண்டு இன்ஜினியராக திரையுலக பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அதன்பின் பின் டி. என். பாலு என்பவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இணை இயக்குனராக மட்டுமே எங்க வீட்டு பிள்ளை, ஆசைமுகம், நான் ஆணையிட்டால், மனசாட்சி, அஞ்சல் பெட்டி 520, வசந்த மாளிகை, எங்கள் தங்க ராஜா, திருமாங்கல்யம், உத்தமன் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் அவள் ஒரு பச்சை குழந்தை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு, வெற்றி, நீதிக்கு தண்டனை, தோஸ்த், முத்தம் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வந்த எஸ்.ஏ. சந்திரசேகர் இதுவரை 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக இருக்கும் தளபதி விஜய்யை அறிமுகம் செய்து வைத்தது மட்டுமல்லாமல் அவருக்கான சரியான பாதையை அமைத்து கொடுத்த பெருமையும் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு தான் சேரும்.
மேலும் 1980களில் மு. கருணாநிதி கதை, வசனத்தில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் சந்திரசேகர் இயக்கியுள்ளார். எஸ். சங்கர், ஏ. வெங்கடேஷ், எம். ராஜேஷ் மற்றும் பொன்ராம் உள்ளிட்ட இயக்குனர்கள் இவரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர்கள் ஆவார்கள்.
1973ஆம் ஆண்டு கர்நாடக இசை பாடகியான ஷோபாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு விஜய் மற்றும் வித்யா என இரு பிள்ளைகள். இதில் மகள் வித்யா உடல்நல குறைவு காரணமாக தனது சிறு வயதிலேயே மரணடைந்துவிட்டார்.
இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் கலக்கியுள்ளார். மேலும் தயாரிப்பாளராக பல நல்ல திரைப்படங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளித்திரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது சின்னத்திரையிலும் உலா வருகிறார். ஆம், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
