நண்பனுக்காக ரவுடிகளிடம் தர்மஅடி வாங்கியுள்ள சீரியல் நடிகர் சஞ்சீவ்- யாருக்காக தெரியுமா?
நடிகர் சஞ்சீவ்
சஞ்சீவ் என்று கூறினாலே முதலில் நமக்கு நியாபகம் வருவது நடிகர் விஜய்யின் நண்பர் என்பது தான்.
அதன்பிறகே அவர் ஒரு சீரியல் நடிகர் என்பது மக்களுக்கு நியாபகம் வரும். படங்களில் இவர் நிறைய நடித்திருந்தாலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடர் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் வீரசிங்கம் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து சன் டிவியிலேயே விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் லட்சுமி என்ற சீரியலில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார், அண்மையில் தான் சீரியல் குறித்த அறிவிப்பு வந்தது.
சஞ்சீவ் குறித்து ஸ்ரீ
வானத்தைப் போல தொடரில் நாயகனாக நடித்து வருபவர் தான் ஸ்ரீ. இவர் அண்மையில் நடிகர் சஞ்சீவ் குறித்தும் பள்ளி பருவத்தில் நடந்து ஒரு விஷயம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், எங்களது குடும்பம், சஞ்சீவ் குடும்பம் இருவருமே நல்ல நண்பர்கள். சிறுவயதில் இருந்தே நாங்கள் ஒன்றாக தான் சுற்றுவோம், எங்களுக்கு நடந்த ஒரு சம்பவத்தை என்னால் மறக்க முடியாது.
என்னை ஒருமுறை 20 அடியாக்கள் சுற்றுவிட்டார்கள், என்னால் 20 பேரை எப்படி தாக்குபிடிக்க முடியும். என்னை அவர்கள் அடிப்பதை தெரிந்தகொண்ட சஞ்சீவ் அங்கு வந்து அவர்களுடன் சண்டை போட்டார்.
ஆனால் இருவருக்கும் அதிகம் அடிபட்டுவிட்டது, அவர்கள் அருவாள், கொம்பு எல்லாம் வைத்திருந்தார்கள், பின்பு போலீஸில் புகார் அளித்தோம் என கூறியுள்ளார்.

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
