நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவிற்கும், நடிகை வணிதாவிற்கும் இப்படியொரு உறவா - அட, இது தெரியாம போச்சே
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா அவ்வப்போது தனது சமுக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது திருமணம் விழா ஒன்றில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் வனிதா.
அதில் நடிகரும், தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து, அவர் 'என்னுடைய சகோதரர்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதையடுத்து நெட்டிசன்கள் ’சஞ்சீவ் எப்படி உங்களுக்கு சகோதரர் ஆவார்' என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு வனிதா ’தன்னுடைய தாயார் மஞ்சுளாவின் சகோதரி ஷ்யாமளா மகன் தான் சஞ்சீவ் என்றும், அதனால் சஞ்சீவ் எனக்கு சகோதரர் தான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
வனிதாவுக்கும் சஞ்சீவ்க்கும் இடையே அக்கா தம்பி உறவு என்பது தற்போது பலருக்கும் தெரிந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.