இன்று பிறந்தநாள் கொண்டாடும் காமெடி கிங் சந்தானம் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா
சந்தானம்
சின்னத்திரையில் களமிறங்கி சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சந்தானம். விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா மூலம் அதிகம் பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து தனது காமெடி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
காமெடியன் டிராக்கில் இருந்து இப்போது ஹீரோவாக மட்டும் நடிக்க தொடங்கி அதிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான DD Returns திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை நாம் அறிவோம்.
அவர் காமெடியனாக நடிப்பதை நிறுத்திய பிறகு அந்த இடத்தை நிரப்ப இதுவரை யாரும் வரவில்லை. அவர் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
அவர்களுக்கு ஒரு மாபெரும் ட்ரீட் ஆக அமைந்தது சமீபத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம். இப்படம் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு தற்போது வெளியாகி உள்ளது. இருப்பினும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்தது.
இத்தனை கோடியா
இந்நிலையில் சந்தானம் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ.15 கோடி வரை சம்பளம் பெரும் சந்தானத்தின் சொத்து மதிப்பு ரூ . 80 முதல் ரூ. 90 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
