விஜய்யை மாட்டிவிட்ட கஞ்சா கருப்பு, பல நாள் சுவாரஸ்ய கதை கூறிய சந்தனாம்...
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், மனசெல்லாம், கெட்டி மேளம் என நிறைய வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. டிஆர்பியிலும் இந்த சீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே வருகிறது.
அதேபோல் சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கும் நிறைய ரெஸ்பான்ஸ் உள்ளது.
சந்தானம்
அண்மையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அழகிய தமிழ்மகன் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை கூறியுள்ளார்.
மதுரைக்கு போகாதடி பாடல் படப்பிடிப்பு முடிந்து காரைக்குடி ஒரு ஹோட்டலில் தங்கினோம். அப்போது அந்த ஹோட்டல் கீழ் ஒரு பாய் வீட்டி கல்யாணம், பிரியாணி வாசனை செமயாக வந்தது.
விஜய் அவர்கள் பிரியாணி வாசனை செமயாக உள்ளது என்றார், உங்களுக்குமா வேண்டுமா என கஞ்சா கருப்பு கேட்க விஜய் வாசனை நன்றாக உள்ளது என்றார். உடனே கஞ்சா கருப்பு கிளம்பிட்டாரு, திடீரென மேலே ஒரு கூட்டம்.
என்ன ஆனது கஞ்சா கருப்பிடம் கேட்கிறேன் அவர், அண்ணன் பிரியாணி கேட்டாரு என்று சொன்னேன், அதனால் எல்லோரும் வந்துள்ளார்கள் என்று கூறியிருக்கிறார். இந்த கலகலப்பான சம்பவத்தை சந்தானம் நிகழ்ச்சியில் ஷேர் செய்துள்ளார்.