நடிகர் சரத்குமாரின் மொத்த சொத்து மதிப்பு! வீடு, கார் என முழு விவரம் இதோ
சரத்குமார்
நடிகர் சரத்குமார் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்தவர். அதன் பின் படிப்படியாக அவர் தற்போது குணச்சித்திர ரோல்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன வாரிசு படத்தில் விஜய்யின் அப்பாவாக அவர் நடித்து இருந்தார். அந்த படத்திற்காக அவர் 2 கோடி ருபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
சொத்து விவரம்
நடிகர் சரத்குமார் சுமார் 150 கோடி ருபாய் சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலக்ஷ்மி ஆகியோரும் சினிமாவில் தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்
கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட சரத்குமார் முதலில் ஒரு fiat கார் தான் வாங்கினாராம். அதன் பின் Pajero sport உள்ளிட்ட பல சொகுசு கார்களையும் அவர் வாங்கி வைத்திருக்கிறார்.
வீடு
நடிகர் சரத்குமாருக்கு சென்னை கொட்டிவாக்கத்தில் ஒரு பெரிய வீடு இருக்கிறது. எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது என நீங்களே பாருங்க.


