நடிகர் சரத்குமாரின் சூப்பர் ஹிட் படமான சூர்யவம்சம் 2ம் பாகம் வருகிறதா?- பிரபலம் பேட்டி
நடிகர் சரத்குமார்
சரத்குமார், தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், ஒரு அரசியல்வாதியாகவும் இருந்து வரும் பிரபலம். சினிமா பயண ஆரம்பத்திலேயே எதிர்மறை வேடங்களில் நடித்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.
அதன்பிறகு சரத்குமாரின் பயணம் வெற்றி, தோல்வி என இரண்டும் கலந்த வண்ணம் உள்ளது.
கடைசியாக ருத்ரன், பொன்னியின் செல்வன் என அவரது நடிப்பில் வெளியாகின. அடுத்து Custody, Bandra, Criminal, The Smile Man, Paramporul என தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.

நடிகரின் பேட்டி
அண்மையில் பொன்னியின் செல்வன் பட வெற்றியை பற்றி சரத்குமார் பேசும்போது, நான் 40 வருடங்களாக கலை உலகத்தில் பயணிக்கிறேன். அனைத்து மொழி படங்களிலும் எனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளேன்.
145 படங்களில் நடித்துவிட்டேன், 24 படங்கள் கைவசம் உள்ளது. 150வது படமாக ஸ்மைல்மேன் தயாராகிறது. நான் நடித்து வெற்றி பெற்ற சூர்ய வம்சம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.
சூரியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் யோசனை உள்ளது என பேசியுள்ளார்.

கஷ்டப்படும் 250 குடும்பங்களுக்கு சத்தமே இல்லாமல் உதவிய விஜய் சேதுபதி- விஷயத்தை கூறிய பிரபலம்