சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமார்.. ஜெயிக்கப்போவது யார்?
சசிகுமார்
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சசிகுமார். இதை தொடர்ந்து நாடோடிகள், தாரை தப்பட்டை,சுந்தரபாண்டியன், வெற்றிவேல், அயோத்தி ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நம் மனதில் இடம் பிடித்துக்கொண்டார்.
அதை தொடர்ந்து, சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த நந்தன் மற்றும் கருடன் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சசி குமார் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து சிம்ரன் இலங்கை தமிழர்களாக நடித்துள்ளனர். சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்து எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இலங்கை தமிழ் ரசிகர்களை இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
ஜெயிக்கப்போவது யார்?
இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது என்று கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் வரும் மே 1 - ம் தேதி வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதே நாளில் தான் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.