நடிகர் சத்யராஜ் அதிகம் கேரக்டர் ரோல்கள் நடிப்பதற்கான காரணம் இதுதானா?- அவரே கூறிய விஷயம்
சத்யராஜ்
வில்லனாக தனது திரைப்பயணத்தை துவங்கி நாயகன், வில்லன், குணச்சித்திர நாயகன் என கலக்கியவர் நடிகர் சத்யராஜ்.
ரஜினி உள்ளிட்ட நடிகர்களுக்கு இவர் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.
தன்னுடைய நண்பர் மணிவண்ணனுடன் இணைந்து 1987 முதல் 1994ம் ஆண்டு வரை அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்துள்ளார், இவர்களின் கூட்டணி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக இவர் மாறியுள்ளார்.
நடிகரின் பேட்டி
நடிகர் சத்யராஜ், சீதாவுடன் இணைந்து மை பர்ஃபெக்ட் ஹஸ்பெண்ட் வெப் தொடரில் நடித்திருந்தார்.
சமீபத்தில் சத்யராஜ் ஒரு பேட்டியில் பேசும்போது, ஹீரோவில் இருந்து குணச்சித்திர நாயகனாக மாறியது ஏன் குறித்து பேசியுள்ளார்.
நான் ஹீரோவாக நடித்த அடுத்தடுத்த 10 படங்கள் தோல்வியை கண்டது, இதனிடையில் கேரக்டர் ரோல்களில் நடிக்க அதிக காசு கொடுப்பதாக இயக்குனர், தயாரிப்பாளர்கள் கூற அதனால் தான் கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்ததாக கூறியுள்ளார்.
இதை சொல்வதற்கு தனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என்றும் சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.