ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சத்யராஜ் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல்
சத்யராஜ்
தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து ஹீரோவாக களமிறங்கி இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் சத்யராஜ்.
வில்லனாக நடிக்க தொடங்கியவர் கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் ஹீவாக மாறினார், முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. தனக்கென ஒரு ஸ்டைலில் நடித்த சத்யராஜின் சில பட வசனங்கள் மிகவும் பேமஸ்.
என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறயே, என்ன மா... கண்ணு, தகடு தகடு போன்ற வசனங்களால் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.
தனது நடிப்பிற்காக சத்யராஜ் தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது, பெரியார் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
சொத்து மதிப்பு
தமிழ் சினிமா கொண்டாடும் பிரபலமாக இருக்கும் சத்யராஜ் பெரிய படம், சிறிய படம் என பார்க்காமல் கதாபாத்திரத்தை மட்டுமே பார்த்து படங்கள் நடிக்கிறார்.
இன்று இவருக்கு பிறந்தநாள் அனைவரும் வாழ்த்து கூறிவரும் நிலையில் நடிகரின் சொத்து மதிப்பு விவரம் வலம் வருகிறது. நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.